சவுதியில் தொலைத்தொடர்பு நிலையங்களின் பணிபுரிபவர்களுக்கு ஓர் வருத்தமான செய்தி!



சவுதியில் மொபைல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் இனி அந்நாட்டவர்கள் மட்டுமே பணியாற்ற முடியும்.


அந்நாட்டு தொழிற்துறை அமைச்சகம் இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், தற்போது தீவிர நடைமுறைப்படுத்தலையும் தொடங்கியுள்ளது. மொபைல் சாதன தொழிற்துறை, விற்பனை, பராமரிப்பு, உதிரிப்பாகங்கள் என அனைத்திலும் இனி சவுதி நாட்டவர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். இது செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் முழுவதுமாக நடைமுறைக்கு வரவுள்ளது.


இச்சட்டம் வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாகுபாடு காட்டப்படாது என தெரிவிக்கப்படுகின்றது. இதனைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளும் ரமலானிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.


இதனை மீறுபவர்களுக்கு எதிராக குறிப்பாக வர்த்தகர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்ட நிபந்தனையை மீறினால் பெரும் தொகையை அபராதமாக கட்டப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.