இஸ்லாமிய மென்பொருளை வடிவமைத் அதிரை இளைஞர் ஷஃபி - சாதனைஅதிரை நெசவுத்தெருவை சேர்ந்தவர் ஷஃபி. மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமிடைய இவர் இது எப்படி? என்ற யூடியூப் மற்றும் முகநூல் பக்கத்தை நடத்தி வருவருகிறார். இதில் தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை பதிந்து வருகின்றார். இவர் தற்போது PROPHETS IN QURAN என்னும் பெயரின் புதிய மெண்பொருளை ஆண்டிராய்டு இயங்குதளத்திற்க்காக வடிவமைத்துள்ளார்.இது குறித்து ஷஃபி அவர்கள் நம்மிடம் கூறியதாவது

“இந்த செயலியில் குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் குறித்த சிறு சிறு விளக்கங்கள் அடங்கிய தொகுப்பு அடங்கியுள்ளது. சிறுவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ளும் பொருட்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அனைவர்களும் புரிந்துகொள்ளும் விதமாக இதன் உள்ளடக்கம் தொகுக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்

– குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் பட்டியல்.

– எளிமையான செயலி வடிவமைப்பு

– எழுத்துகளை சிறிதாகவோ பெரிதாகவோ மாற்றும் வசதி.

– எளிமையான வார்த்தைகள்.

மேலும் இதன் பயன்பாடு அதிகரிக்கும் நோக்கில், செயலி மேம்பாடு செய்யும் பணியும் நடந்துகொண்டுள்ளது. செயலி மேம்பாடு குறித்த தங்களின் மேலான கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் பிழைகள் இருப்பின் எங்களுக்கு தெரியபடுத்தவும்.”

என்றும் விரைவில் ஐ போனுக்காக வும் இந்த செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சகோதரர்  ஷஃபியின் இந்த முயற்சியை . முத்துப்பேட்டை மீடியா.காம்   சார்பாக பாராட்டுகிறோம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.