இந்தியாவில், ‘வாட்ஸ்அப்’ தடை செய்யப்பட வாய்ப்புஇந்தியாவில், ‘வாட்ஸ்அப்’ தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாற்றம்

தகவல்களை பகிரும் செயலியான ‘வாட்ஸ்அப்’, உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்டோரால் பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்தில், வாட்ஸ்அப், தனது செயலியில் சில மாற்றங்களை செய்தது. அதாவது, தனது செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்களை அனுப்புபவரும், அதை பெறுபவரும் மட்டுமே பார்க்க முடியும்.

சைபர் குற்றவாளிகளோ, இணையதளத்தை முடக்குபவர்களோ கூட பார்க்க முடியாது. ‘அவ்வளவு ஏன், வாட்ஸ்அப் நிறுவனத்தை உருவாக்கிய நாங்கள் கூட பார்க்க முடியாது’ என்று அதன் நிறுவனர்கள் ஜன் கவும், பிரையன் ஆக்டன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டில் இந்த புதிய வசதி ஏற்கனவே சர்ச்சையை உருவாக்கி விட்டது.

சட்ட விரோதம்

இந்தியாவில் ஆன்லைன் சேவைகள் 40 பிட் என்கிரிப்சன்வரை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. இந்த திறனுடன் அனுப்பப்படும் தகவல்களை, பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் பார்க்க முடியும். ஆனால், வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதியில், 256 பிட் என்கிரிப்சன்வரை பயன்படுத்தப்படுகிறது.

40 பிட் என்கிரிப்சனுக்கு மேல் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்து சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஆனால், அதற்கு வாட்ஸ்அப் சம்மதிக்காது என்று தெரிகிறது.

அனுமதி பெறாமல், 40 பிட் என்கிரிப்சனுக்கு மேல் பயன்படுத்தி, தகவல்களை பகிர்வது சட்ட விரோதம் ஆகும். ஆகவே, தற்போதைய தரம் உயர்த்தப்பட்ட வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தும் அனைவரும் சட்ட விரோத காரியத்தை செய்து வருவதாகவே பார்க்கப்படுகிறது.

தடை வருமா?

மேலும், தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை புலனாய்வு அமைப்புகள் பார்க்க முடியாததால், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, தொலைத்தொடர்பு சட்ட விதிமுறைகளுக்கு உட்படாததாலும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உருவாக்குவதாலும் இந்தியாவில் வாட்ஸ்அப் தடை செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

அரசின் நிலை

அதே சமயத்தில், உடனடியாக தடை விதிக்கப்படாது என்று கூறப்படுகிறது. ஏனென்றால், வாட்ஸ்அப், இந்திய நிறுவனம் அல்ல. செல்போன் சேவை நிறுவனங்கள் மற்றும் இணையதள சேவை நிறுவனங்களைப் போல, வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் ஆகிய செயலிகள், இந்தியாவில் இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. எனவே, இந்திய தொலைத்தொடர்பு விதிமுறைகள் அந்த செயலிகளை கட்டுப்படுத்தாது என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை ஒழுங்குபடுத்திய பிறகுதான், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, வாட்ஸ்அப் மீது நடவடிக்கை எடுக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.