சுதந்திர போராட்டத்தில் இருந்து இந்துத்துவா அமைப்புகள் விலகியே இருந்தன: வரலாற்று ஆராய்ச்சியாளர் மிருதுளா முகர்ஜி பேச்சுஏகாதிபத்தியம் மற்றும் காலனித்துவம் ஆகியவற்றுக்கு எதிரான தேசியவாத கருத்து 3ம் உலக நாடுகளில் இருப்பதை போன்று இந்தியாவில் வேரூன்றியுள்ளதுடன் இதில் இந்துத்துவாவின் ஆதரவாளர்களுக்கு எந்த வேலையும் இல்லை என வரலாற்று ஆராய்ச்சியாளர் மிருதுளா முகர்ஜி கூறியுள்ளார்.

அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தில், இந்தியா மற்றும் தேசியவாதம் மற்றும் சுதந்திரத்திற்கான பாதை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று நேற்று மாலை நடைபெற்றது.  இதில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் முன்னாள் இயக்குநர் மிருதுளா முகர்ஜி கலந்து கொண்டார்.

அவர் பேசும்பொழுது, எந்த வகையிலான தேசியவாதத்திலுமுள்ள மற்ற 3 முக்கிய அம்சங்களான சமத்துவம், குடிமக்களுக்கான சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கும் எந்த வகையிலும் இந்துத்துவா முறையிலான தேசியவாதத்தில் இடம் கிடையாது.

கடந்த 1942ம் ஆண்டு இறுதியில் கூட இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் சுதந்திர போராட்டத்தில் இருந்து உள்நோக்கத்துடன் விலகியே இருந்தன.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கூட எந்த வகையிலும் இந்த அமைப்பினரின் பங்கு என்பது கிடையாது என அவர் கூறினார்.  ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் போராட்டம் ஆனது, தற்பொழுதுள்ள இந்தியாவில் ஜனநாயக நடவடிக்கைகளில் வளர்ச்சி குறித்து அறிவுறுத்தும் மற்றும் கற்பிக்கும் கட்டத்தில் உள்ளது.

இந்தியாவில் உள்ள இளைஞர்கள் ஒரு காலகட்டத்திற்கு பின்னர் இந்தியாவின் ஜனநாயக செயல்பாட்டு அமைப்புகள், பேச்சு சுதந்திரம் மற்றும் குடிமக்கள் சுதந்திரம் ஆகியவற்றின் அடித்தளம் மற்றும் வருங்காலம் குறித்து மீண்டும் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.  இத்தருணத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலை கழக விவகாரம் நடந்துள்ளது என கூறியுள்ளார்.

இது ஒரு புதிய எழுச்சி போன்றது.  நாடு முழுவதுமுள்ள இளைஞர்களின் மனதில் இத்தகைய எண்ணங்கள் இடம் பெற தொடங்குவதற்கு முன் உள்ள தருணம் இது என அவர் கூறியுள்ளார்.  சகிப்பின்மை மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலை கழக விவகாரங்களில் மோடி அரசாங்கத்தை அவர் விமர்சித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.