நம்மையும், நம்சந்ததிகளையும் காட்கும் - மரம்கோடையின் வெப்பத்தை தனிக்க தண்னீர்பந்தல்கள் தற்காலிக தீர்வாக இருந்தாலும் பசுமை புரட்சிதான் நிரந்தர தீர்வு!!

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வீட்டிற்க்கு முன்பும் தெருக்களில் மரம் வளர்க்க வேண்டும்

மரக்கன்று நடுவது ஒரு பணியாக இருந்தாலும் அதை பராமரிப்பதுதான் சிரமமான பணி


வீடு வீடாக சென்று மரம் வளர்ப்பதின் நன்மைகளை எடுத்து சொல்லி அதை பராமரிக்கும் முறைகளையும் தெளிவாக விளக்கி உங்கள் வீட்டின் முன்பு மரக்கன்று நடுகிறோம் அதை நீங்கள் பராமரித்து கொள்கிறீர்களா என கேட்டு மரக்கன்றுகளை நடவேண்டும்

இதை தவ்ஹித்ஜமாத்   போன்ற  இஸ்லாமிய அமைபுகள் கையில் எடுத்து செய்தால் பத்து வருடங்களில் பசுமை சிட்டிகளை தமிழகத்தில் பார்க்கலாம் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.


 

Treeமரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளி விடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. மரங்கள் மழையைத் தருகின்றன. மேலும் ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது. ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது. ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது. ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது. ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது. ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ. மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதெல்லாம் தெரிந்த நிலையில் .ஒரு மரம் 850 மனிதர்களை காப்பாற்றுவதாக அமெரிக்க ஆய்வில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

மரங்களினால், மனிதருக்கு பல்வேறு பயன்கள் கிடைத்து வருகின்றன. இயற்கையின் கொடை போன்று ரோட்டின் இருபுறமும் வளர்ந்து நிற்கும் மரங்களால், வெயிலின் தாக்கத்திலிருந்தும் தப்பிக்க முடியும். இதுபோன்ற பல்வேறு நன்மைகளை பயக்கும் மரங்கள் வெட்டப்படாமல் வளர்க்கப்பட்டதால், போதுமான மழையும் கிடைத்ததுடன், நன்மையும் முன்னோர்களுக்கு கிடைத்து வந்தது.நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகமாகிகொண்டே போகிறது இதனால் சமுதாயத்தில் காற்றுமாசுபாடு ஏற்பட்டு மனித இனத்திற்க்கே அழிவுபாதையில் இட்டுசெல்கிறது.இதில் இருந்து விடுபடவேண்டும் என்றால் மரம் வளர்த்து மனித இனத்தை காப்பதே இதன் நோக்கம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காற்றுமாசுபாட்டால் வருடத்திற்க்கு 1 பில்லியன் மனித ஆரோக்கியத்திற்க்கு கேடுவிளைவிப்பதாகவும், இதனால் அமெரிக்காவில் 80% மக்கள் நகர்புறங்களில் மரம் வளர்க்கும் முயற்ச்சியில் அமெரிக்க மக்கள் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தனர். மரத்தின் நன்மையால் மனிதர்களுக்கு தூய்மையான ஆக்சிஜன் கிடைக்க வழி செய்கிறது.ஓசோன் படலம் ஓட்டை ஆகாமால் சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா ஒளி கதிர் வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. காற்று மாசுபாட்டால் மனிதர்களுக்கு சுகாதார சீர்கேடுகளை விளைவிக்கிறது. இதயநோய், நுரையீரல் தொடர்பான வியதிகள்,ரத்த நாளங்களின் நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் போன்ற பல்வேறு சுகாதார சீர்கேடுகளை காற்று மாசுபாட்டால் பல்வேறு இன்னல்களுக்கு மனித இனம் ஆளாவததாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கிராமபுறங்களை விட நகர்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு மரம் வளர்ப்பது அவசியம் என்று தெரிவித்தனர்.இதனால் சுகாதார சீர் கேடு ஏற்படமால் இருக்க மரத்தை நாம் காப்பாற்றினால் நம்மை மரம் காப்பாற்றும் என்று தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.