பள்ளி பேருந்தில் வெடிப்பொருட்களை விட்டுச் சென்ற சி.ஐ.ஏ.அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் பயிற்சியின் போது பயன்படுத்திய வெடிப்பொருட்களை மாணவர்கள் பயன்படுத்தும் பள்ளிப் பேருந்திலேயே விட்டுச்சென்றுள்ளது சி.ஐ.ஏ. இந்த சம்பவம் கவனக்குறைவால் நிகழ்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.

பள்ளிப் பேருந்தில் விட்டுச் செல்லப்பட்ட இந்த வெடிப்போருட்களை மீண்டும் கண்டெடுப்பதற்கு முன் அந்த பேருந்து 26 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு எட்டு முறை பயணம் செய்துள்ளது. இந்து குறித்து கருத்து தெரிவித்த லவ்டௌன் பணி செய்தித் தொடர்பாளர் வேய்ட் பயார்ட் கூறுகையில், பள்ளிப் பேருந்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதை வெளியில் கூற வேண்டாம் என்று சி.ஐ.ஏ. தங்களிடம் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். மேலும் இந்த வெடிபொருள் களிமண் போன்று இருந்தது என்றும் அதனை வெடிக்க வைக்க விசேஷ டெட்டனேடர்கள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “இந்த நிகழ்வு குறித்து நாங்கள் அனைவரும் அமைதியிலந்துள்ளோம் என்றும் நடந்த நிகழ்வுகளை அது எப்படி நடந்தது என்று மறு ஆய்வு செய்ய உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சி.ஐ.ஏ “பயிற்சியின் போது கவனக்குறைவால் சி.ஐ.ஏ வின் கே-9 பிரிவு வெடிப்பொருட்களை பேருந்தில் விட்டுச்சென்றுள்ளது என்றும் அது பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு எத்தகைய ஆபத்தும் விளைவிக்கவில்லை என்றும் கூறியுள்ளது. இன்னும் இந்த நிகழ்வு குறித்து சுதந்திரமான விசாரணை ஒன்று நடத்தப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

 

Thanks To : Puthiya Vidiyal
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.