"நரகத்தின் நுழைவு வாயில்" பல ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும்  துர்க்மெனிஸ்தானின் அகால் மாகாணத்தில் தர்வாஷ் கிராமத்தில்  பூமியின் மேற்பரப்பில் எப்போதும் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பெரிய துளை ஒன்று கண்டு பிடிக்கபட்டது. இந்த துளையை  1971 ஆம் ஆண்டு  ரஷ்ய ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டு பிடித்தார். அந்த துளை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு  மேலாக தொடர்ந்து தீ ஜூவாலை வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.


இந்த் துளை 70 மீட்டர் அகலம் உள்ளது. இதன் ஆழம் 20 மீட்டர் ஆகும். இந்த துளையில் இருந்து உயர ரக எரிவாயு வெளிப்படுவதால் தொடர்ந்து அங்கு தீ ஜூவாலை வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். உலகில் மிகப்பெரிய அளவில் இங்கு எரிவாயு வளம் உள்ளது.


இயற்கையால் தோற்றுவிக்கபட்ட ஒரு அருமையான காட்சியாக அது காணபவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.இதை உள்ளூரை சேர்ந்தவர்கள் ”நரகத்தின் நுழைவு வாயில்” என அழைக்கிறார்கள். துர்க்மெனிஸ்தானுக்கு ஆண்டுதோறும் 50 நாடுகளை சேர்ந்த 12 முதல் 15ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர் அவர்கள் இந்த நரகத்தின் நுழைவுவாயிலை பார்வையிட்டு செல்கின்றனர்


கனடாவை சேர்ந்த சாகசக்காரர் ஜார்ஜ் கவுருனிஸ்  ஒருமுறை அந்த துலை பகுதியில் நடந்து சில மண் மாதிரிகளை எடுத்துள்ளார்.


துர்க்மெனிஸ்தான் அரசு அந்த பகுதியில் ஆய்வு நடத்தி இயற்கை எரிவாயு எடுப்பதற்கான திடங்களை நிறைவேற்றி வருகிறது. துர்க்மென்ஸ்தான் அரசு அடுத்த 20 ஆண்டுகளில் இந்த பகுதியில் இருந்து எடுக்கப்படும் அலவை உயர்த்தி 75 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை பாகிஸ்தான், சீனா, இந்தியா, ஈரான்,ரஷ்யா, மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்று மதி செய்ய திட்டமிட்டு உள்ளது.


EAE34752-B7F4-4731-A821-AA1278921B44_L_styvpf


Thanks To:    அதிரை  கோ.மு.அ. ஜமால் முஹம்மது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.