இலங்கையில் முஸ்லிம்களின் நோன்பு காலத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்முஸ்லிம்களின் நோன்பு காலத்துக்கு இலங்கையில் வழங்கப்படும் முக்கியத்துவம்:
உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு..!
தேர்தலுக்காக முஸ்லிம்களின் சமய கடமைகள் பாதிக்­கப்­படக் கூடா­தெ­னவும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முஸ்­லிம்­களின் புனித மாத­மான ரம­ழானில் நடாத்த வேண்டாம் எனவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டுள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கே ஜனா­தி­பதி இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.
எதிர்­வரும் ஜூன் மாதம் முஸ்­லிம்­களின் புனித கட­மை­களில் ஒன்­றான நோன்பு நோற்கும் ரமழான் மாத­மா­கையால் அம்­மா­தத்தில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடாத்த வேண்டாம் எனவும் தேர்­தலை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்­துக்கும் பின்பு நடத்­து­மாறும் மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபாவிடம் உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.
முஸ்­லிம்­களின் இரவு நேர தராவீஹ் தொழுகை உட்­பட விசேட மத கிரி­யை­க­ளுக்கு இதனால் பாதிப்பு ஏற்­ப­டு­மெ­னவும் ஜனா­தி­ப­தி தெரி­வித்­துள்ளார்.
இது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பாவைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது, அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்,
எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் ஜூனில் நடாத்­தப்­ப­டு­வ­தற்கே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. எல்லை நிர்­ணய முறைப்­பா­டு­களும் துரி­த­க­தியில் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.
எல்லை நிர்­ணய அறிக்­கையை ஏப்ரல் மாதத்தில் கைய­ளிப்­ப­தற்கு அதற்­கென நிய­மிக்­கப்­பட்ட குழு திட்­ட­மிட்­டுள்­ளது.
எதிர்­வரும் ஜூன் மாதம் முஸ்­லிம்­களின் புனித நோன்பு மாத­மா­கையால் ஜூனில் தேர்­தலை நடாத்­த­வேண்­டா­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்னை வேண்­டி­யுள்ளார்.
அதனால் எதிர்வரும் ஜூனில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்தப்படமாட்டாது.
தாமதித்தே நடாத்தப்படும் என தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.