முத்துப்பேட்டை அருகே மீன் வியாபாரியை தாக்கிய தந்தை, மகன் கைதுமுத்துப்பேட்டை அடுத்த கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (55). மீன் வியாபாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி பக்கிரிசாமி (45) என்பவரிடம் திராசு, படிக்கல்லை இரவலாக கொடுத்திருந்தார். நீண்ட நாட்களாகியும் பன்னீர்செல்வம் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு பக்கிரிசாமியிடம் பன்னீர் செல்வமும் அவரது மகன் சுப்பிரமணியனும் கேட்டனர். அப்போது பக்கிரிசாமி தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து பக்கிரிசாமியை தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பி, உருட்டு கட்டையால் பன்னீர் செல்வம், சுப்பிரமணியன் தாக்கினர். படுகாயமடைந்த பக்கிரிசாமி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிந்து பன்னீர்செல்வம், சுப்பிரமணியனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.