தண்ணீர் பஞ்சம் ..!!! தண்ணீரை வீண்விரயம் செய்யாதீர்கள்...


தண்ணீர் பஞ்சம் ..!!

இந்தியாவில் அங்கிங்கெனாதபடி ஏராளமான மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது குஜராத் மாநிலத்தில் தண்ணீர் வண்டி வந்து விட்டால் அந்த இடத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை அப்படி இல்லாவிட்டால் தண்ணீருக்காக அடிதடி ..

மகாராட்டிரம் போன்ற மாநிலங்கள் சொல்லவே தேவையில்லை ஒரு குடம் தண்ணீருக்காக பல மைல்கள் நடக்கவேண்டிய அவலம் ..


இன்னும் ஒருசில மாநிலங்களில் தண்ணீர் பஞ்சத்தால் ஊரையே காலி செய்துவிட்டு செல்லும் துயரம் ..

இப்படி கோடை காலம் துவங்கியது முதலே தண்ணீர் பிரச்சினை துவங்கி விட்டது ..

இதற்கெல்லாம் காரணம் அந்தந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள்தான் கோடைக்காலம் துவங்கும் முன்னரே கோடைக்காலத்தை சமாளிக்கத்தேவையான திட்டமிடல் சரியாக பின்பற்றப்படுவதில்லை மழை நீரை சேமிக்க சரியான வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை .

இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் இறைவன் பேரருளால் தமிழகத்தில் இந்த அளவுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதில்லை ..

இருந்தாலும் இறைவன் எப்படி நாடி இருக்கிறனோ தெரியவில்லை தமிழகத்தில் ஏற்படும் நிலையை ..

இப்படி தண்ணீர் பஞ்சம் மழை இல்லாமை போன்ற நேரத்தில் இறைத்தூதர் மழைத்தொழுகை பிரார்த்தனை போன்றவற்றை கற்றுத்தந்திருக்கிறார்கள் ..

வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் தத்தமது பகுதிகளில் மழைத்தொழுகைகளை ஏற்பாடு செய்யலாம் ..

மழைக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை

அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.

(இறைவா! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அபூதாவூத் 988

அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா. அல்லாஹும்மஸ்கினா

(இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக!)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி

நூல்: புகாரீ 1013

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.

(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா! நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்;நாங்கள் தேவையுடையவர்கள்; எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக!)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அபூதாவூத் 992

[gallery columns="1" size="full" ids="34909,34905,34904"]

 


 


 Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.