தொகுதி பங்கீட்டில் அதிருப்தி.. திமுக கூட்டணியில் இருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ கட்சி!திமுக தலைமையிலான கூட்டணியில், சட்டப் பேரவைத் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில், கசப்பு காரணமாக, கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில், சட்டப் பேரவைத் தொகுதி பங்கீடு குறித்து, திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவை கட்சியின் மாநில செயலகக் குழு அமைத்திருந்தது.

 

இந்தக் குழுவில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் முகமது முபாரக், எஸ்.எம்.ரஃபீக் அகமது, மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர் அமீர் ஹம்சா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருந்தன. இக்கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது. இன்று காலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தெகலான் பாகவி தலைமையில் தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெஹ்லான் பாகவி பேசினார். அப்போது அவர் கூறுகையில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுடன் இன்று தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசினோம். இதில் பேச்சுவார்த்தை முடியவில்லை என்றார். இந்நிலையில், தெகலான் பாகவி இன்று மாலை அளித்த பேட்டியில், "திமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சி வெளியேறுகிறது. எங்களுக்கான முக்கியத்துவத்தை திமுக அளிக்கவில்லை. அடுத்தகட்ட முடிவு பற்றி நாளை அறிவிக்க உள்ளோம்" இவ்வாறு தெகலான் பாகவி தெரிவித்தார்.


 

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.