முத்துப்பேட்டையில் தி.மு.க வேட்பாளர் ப.ஆடலரசன் தீவிர வாக்கு சேகரிப்பு!



திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தி.மு.க திருத்துறைப்பூண்டி தொகுதி வேட்பாளர் ப.ஆடலரசன், மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கார்த்திக், ஒன்றிய செயலாளர் இரா.மனோகரன் ஆகியோரது தலைமையில் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிகழ்ச்சியின் போது ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர அவைத் தலைவர் ராமஜெயம், நகரப் பொருளாளர் பாலு, நகர துணைச் செயலாளர் நவாஸ்கான், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜாம்பை ராமஜெயம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கனேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், இபுராஹிம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் முத்துலெட்சுமி சிவா, ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவ.அய்யப்பன், ஜெகபருல்லா, ரத்தினகுமார், கிருஷ்ணன், நகர நிர்வாகிகள் அன்பன், ரபிஅகம்மது, அமானுல்லா, ராஜாராம், இன்பராஜ், கர்ணன், ராஜா, முஸ்தாக், மூத்த உறுப்பினர் செல்வராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா.பிராபாகர், முன்னால் பேரூராட்சி கவுன்சிலர் முகம்மது மைதீன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். பின்னர் தி.மு.க வேட்பாளர் ப.ஆடலரசன் தி.மு.கவில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

 

Mohaideen 02


படம் செய்தி:
முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் வேட்பாளர் ப.ஆடலரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.