இறைத்தூதர் நபிகள் நாயகத்துடன் கருணாநிதியை ஒப்பிட்டு பேசியதற்காக கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்.!இறைத்தூதர் நபிகள் நாயகத்துடன் கருணாநிதியை ஒப்பிட்டு பேசியதற்காக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

 

சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் நாகராஜன், நபிகள் நாயகத்திற்கு அடுத்து கருணாநிதி தான் முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் என்று பேசியதாக கூறப்படுகிறது.

 

இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச்செயலாளர் முஹம்மத் யூசுப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நபிகள் நாயகத்துடன் கருணாநிதியை தொடர்புப்படுத்தி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, வரும் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். 

 

மேலும் வரும் வியாழக்கிழமைக்குள் கருணாநிதி, இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், திமுக தலைமை அலுவலகம் மற்றும் கோபாலபுரம் இல்லம் ஆகியவற்றை முற்றுகையிடுவோம் எனவும் அவர் எச்சரித்தார்.

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.