எஸ்டிபிஐ'யுடன் சமாதான உடன்படிக்கைக்கு தயாராகும் திமுகபாளையங்கோட்டையை விட்டுக் கொடுக்கவும், கடையநல்லூரை தட்டிப் பறிக்கவும் திட்டம்..!

3 தொகுதிகளுடன் 'வக்ப் வாரிய தலைவர்' பொறுப்பையும் 'எஸ்டிபிஐ'க்கு கொடுக்க திமுக சம்மதம்..!!

கொசுறு செய்தி :

இம்முறை பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலையத்தில் அல்ல..

SDPI-ன் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்றும் தகவல்..!!!

ஸ்டாலினின் அதிரடி திட்டத்தை ஏற்குமா எஸ்டிபிஐ?

திமுக வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்துவிட்ட நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், 50 இடங்களில் போட்டியிடப் போவதாக 'எஸ்டிபிஐ' அறிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, எஸ்டிபிஐ போட்டியிடும் தொகுதிகளில் திமுகவுக்கு ஓரளவு பாதிப்பு ஏற்படும் என்பது கலைஞர் உள்ளிட்ட திமுக தலைவர்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

இதையடுத்து, எஸ்டிபிஐ நிர்வாகிகளை சமாதானப் படுத்தும் வேலைகளை துவக்கிட திமுக திட்டமிட்டுள்ளது.

இம்முறை அறிவாலையத்துக்கு அழைத்துப் பேசுவதற்கு பதிலாக சென்னையில் உள்ள எஸ்டிபிஐ தலைமை அலுவலகத்துக்கே சென்று கூட்டணியை புதுப்பிக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TPM மைதீன் கானுக்காக ஒதுக்கி வைத்திருந்த பாளையங்கோட்டை தொகுதியுடன், முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுத்துள்ள கடையநல்லூரையும் திரும்ப பெற்று 'எஸ்டிபிஐ'க்கு வழங்கிட ஸ்டாலின் முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது.

அத்துடன் மேலும் ஒரு தொகுதியை சேர்த்து 3 தொகுதிகளுடன் பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய திமுக விரும்புகிறது.

இது தவிர, வக்ப் வாரிய தலைவர் பதவி, உள்ளிட்ட வேறு சில உத்தரவாதங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.