முத்துப்பேட்டை திமுகவினர் மீது போலீஸ் வழக்குமுத்துப்பேட்டையில் குப்பை அள்ளாததை கண்டித்து போராட்டம் நடத்திய திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள திமுக முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம் நினைவு ஸ்தூபியை மறைத்து குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. இதை அள்ளி சுத்தம் செய்ய திமுகவினர் கோரிக்கை வைத்தும் பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே திமுக வேட்பாளா ஆடலரசன், தர்மலிங்கம் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவிக்க வந்தார். அன்றைய தினம் திமுகவினர் குப்பை அள்ளாத பேரூராட்சியை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசாருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் பொது மக்களுக்கு இடையூறு செய்ததாக முத்துப்பேட்டை போலீசார் திமுக பேரூராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன், ஜெகபருல்லா,  வார்டு செயலாளர் அன்பன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.