மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய சாட்சிகள் தடுமாற்றம்இந்துத்துவ சக்திகள் சம்பந்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள் சமீப நாட்களாக தடம் மாறி வருவதாக குற்றம் சுமத்தப்படும் நிலையில் அந்த வழக்குகளின் முக்கிய சாட்சிகள் தற்போது பிறழ்சாட்சிகளாக மாறி வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
டெல்லியை சேர்ந்த மருத்துவர் ஆர்.பி.சிங் என்பவர் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கு திட்டம் தீட்டப்பட்ட கூட்டங்களில் தான் கலந்து கொண்டதாக முன்னர் கூறியதை தற்போது மறுத்துள்ளார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவர், மஹாராஷ்டிராவின் தீவிரவாத எதிர்ப்பு படையினர் தன்னை சித்திரவதை செய்ததாகவும் தற்போது கூறுகிறார்.
குண்டுவெடிப்புகளை நடத்த சதி ஆலோசனை நடத்தப்பட்ட போபால், நாசிக் மற்றும் ஃபரிதாபாத் கூட்டங்களில் கர்னல் புரோகித், சாத்வி பிரக்யா சிங், சுவாமி அசிமானந்தா மற்றும் ரமேஷ் உபாத்யாயா ஆகியோருடன் ஆர்.பி.சிங்கும் கலந்து கொண்டதாக தீவிரவாத எதிர்ப்பு படை கூறியிருந்தது. மாலேகானின் குண்டுவெடிப்பை நடத்துவதற்கான திட்டம் ஏப்ரல் 11, 2008 அன்று போபாலில் தீட்டப்பட்டதாக ஏ.டி.எஸ்.தெரிவித்தது.
ஆனால் தற்போது நீதிமன்றத்தை அணுகியுள்ள ஆர்.பி.சிங் தான் முன்னர் கூறிய அனைத்தையும் மறுத்துள்ளார். மற்றொரு முக்கிய சாட்சியான யாஷ்பால் பதானாவும் தான் முன்னர் கூறிய வாக்குமூலத்தை தற்போது மாற்றிக் கூறியுள்ளார். போபால் கூட்டத்தில் மாலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்த முடிவு செய்யப்பட்டதாகவும் அதற்கான நபர்களை தேர்வு செய்யும் பொறுப்பை சாத்வி பிரக்யா சிங் ஏற்றுக் கொண்டதாகவும் யாஷ்பால் முன்னதா ஏ.டி.எஸ்.யிடம் கூறியிருந்தார். ஆனால் தான் அவ்வாறு எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்றும் ஏ.டி.எஸ். தன்னை வற்புறுத்தியதன் காரணமாகவே அந்த வாக்குமூலத்தை கொடுத்ததாகவும் இப்போது கூறுகிறார்.
இந்த இருவரின் சமீபத்திய வாக்குமூலங்கள் காரணமாக இந்த வழக்கின் விசாரணையில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து இந்துத்துவ இயக்கங்கள் சம்பந்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள் தடம் மாறி வருகின்றன. மாலேகான் வழக்கில் மென்மையான போக்கை கையாளுமாறு தன்னிடம் கூறப்பட்டதாக அரசு தரப்பு வழக்கிறஞர் ரோஹினி சாலியான் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.
சில நாட்களுக்கு முன்னர் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கர்னல் புரோகித்திற்கு சம்பந்தம் இல்லை என்று என்.ஐ.ஏ. டைரக்டர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.