தேசிய புலனாய்வு அதிகாரி "தன்சில் அஹமத்" படுகொலை திருமண வீடியோ மூலம் கொலையாளிகள் அடையாளம்!உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணத்துக்கு சென்றுவிட்டு காரில் திரும்பி கொண்டிருந்த தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரி தன்சில் அஹமத் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், வீடியோவில் இருந்து கொலையாளிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். தன்சீல் அஹமத் கலந்து கொண்ட திருமண வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோவில் இருந்த இருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இவர்களை திருமண வீட்டாரால் அடையாளம் காட்ட முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கொலையாளிகளாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர்களின் புகைப்படங்களை விரைவில் ஊடகங்களில் வெளியிடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த கொலை குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தன்சீல் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதியை உ.பி. அரசு அறிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.