மக்கள் தண்ணீருக்காக தவிக்கும் போது I.P.L கிரிக்கெட் ஒரு கேடா? : மராட்டிய அரசுக்கு மும்பை ஐகோர்ட் கேள்விகடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் மராட்டிய மாநிலத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது அவசியமா என மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் 3 மைதானங்களில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பிட்ச் எனப்படும் ஆடுகளத்தை பராமரிக்க தினந்தோறும் 60,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்நிலையில் போட்டிகளை ரத்து செய்யுமாறு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் பயன்படுத்திய தண்ணீருக்கு வரி செலுத்த ஐ.பி.எல் தலைவருக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அப்போது டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதால் ஆட்டங்களை ரத்து செய்தால் பெரும் இழப்பு ஏற்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் மக்களை விட கிரிக்கெட் போட்டி அவ்வளவு முக்கியமா?  அதிகளவு தண்ணீரை இப்படி வீணாக்கலாமா? கிரிக்கெட் சங்கம் இவ்வளவு அலட்சியமாக இருக்கலாமா என சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது. கிரிக்கெட் கட்டுபாபட்டு வாரியத்திற்கான நீர் இணைப்பை துண்டித்தால் தான் உங்களால் நிலைமையை உணர முடியும் என குறிப்பிட்ட நீதிமன்றம், தண்ணீர் பற்றாக்குறை இல்லாத வேறு மாநிலத்திற்கு ஐ,பி.எல் போட்டிகளை மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளது.  ஐ.பி.எல் தொடரில் வரும் 9ம் தேதி தொடக்க ஆட்டமும், அடுத்த மாதம் 29ம் தேதி இறுதி ஆட்டமும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. மும்பை , புனே மற்றும் நாக்பூரில் மொத்தம் 20 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.