பட்டுக்கோட்டை தொகுதியில் தான் போட்டியிடாதது குறித்து MLA ரெங்கராஜன் தொகுதி மக்களுக்கு கடிதம்



பட்டுக்கோட்டையில் மீண்டும் போட்டியிடாத தற்போதைய எம்.எல்.ஏ ரெங்கராஜன் பட்டுக்கோட்டை மக்களுக்கு கடிதம்: மீண்டும் போட்டியிடாதது குறித்து விளக்கம்.

என் உயிரினும் மேலான பட்டுக்கோட்டை மக்களுக்கு எனது வணக்கம்!!

மூன்று முறை என்னை வெற்றி பெற செய்தமைக்காக எனது நன்றிகள்.

என்னை அரசியலில் அறிமுகபடுத்திய மக்கள்தலைவர் ஐயா மூப்பனார் குடும்பத்தினர், தலைவர் ஐயா G.K.வாசன் ஆகியோருக்கு நன்றி.

தேர்தலில் வெற்றி பெற அரும்பாடுபட்ட இயக்க நண்பர்கள், கூட்டணிக்கட்சி நண்பர்கள், எனது உறவினர்கள், நலம்விரும்பிகள், நல்ல உள்ளங்ககளுக்கும் நன்றி, நன்றி!

அதீத பாசம் கொண்ட சிறுபான்மை மக்களுக்கு நன்றி!

தனிப்பட்ட காரணமாக தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்து என் பாசமுடைய தலைவர் GK வாசன் அவர்களிடம் 6 மாதம் முன்பே தெரிவித்துவிட்டேன்.

நான் பதவியில் இருந்த நாட்களில் எந்த முறை கேடுகளிலிலும் ஈடுபடாமல் பட்டுக்கோட்டை மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளேன். பட்டுக்கோட்டைக்கு எனது முயற்சியின்காரணமாக சட்டமன்ற கோரிக்கை காரணமாக கீழ்கண்ட முக்கிய திட்டங்கள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

2006-2011

1.புறவழிச்சாலை திட்டம் ஒரு பகுதி ரூ 7.50 கோடியில் நிறைவேற்றப்பட்டது.

2.வட்டார போக்குவரத்து அலுவலகம் (RTO) அமைக்கப்பட்டது.

3.புதிய தாலுகா காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

4.இரண்டு துணைமின்நிலையங்கள் தாமரங்கோட்டை மற்றும்
துவரங்குறிச்சியில் அமைக்கப்பட்டது.

5.தென்னை வணிக வளாகம் அமைக்கப்பட்டது.

6.100 க்கு மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கப்பட்டது.

2011-2016

1.புறவழிச்சாலை இரண்டாம்கட்ட பணிகளுக்கு 24.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துடெண்டர் விடப்பட்டுள்ளது, தேர்தல் முடிந்தவுடன் பணிகள் தொடங்கும்.

2. பட்டுக்கோட்டை நகராட்சி பொன் விழா ஆண்டை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் 25 கோடி சிறப்பு நிதி பெறப்பட்டு நகரில் சாலை மேம்பாடு செய்யப்பட்டது.

3.கரம்பயம் மற்றும் கீழக்குறிச்சியில் புதிய துணை முன் நிலையங்கள் 9 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

4. அதிராம்பட்டிணம், நாட்டுச்சாலை, மற்றும் தம்பிக்கோட்டை ஆகிய இடங்களில் துணைமின் நிலையம் அமைக்கப்பட நிலம் கையகப்படுத்தப்பட்டு டெண்டர் விடப்படும் நிலையில் உள்ளது.

5. சட்டமன்ற உறுப்பினர் நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.