ஏன் SDPIக்கு வாக்களிக்க விரும்புகிறேன்?- ஒரு பாமரனின் பதில் !SDPI தோழர்களே!


ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நீங்கள் கண்ட போராட்டங்களை முழுமையாக கூறி முடிப்பதற்குள் மூச்சு நின்று விடும்!

ஆனால்,
மக்களின் உரிமைகளுக்காக நீ போராடிய காரணத்தினால் பாசிஸவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு உங்கள் மூச்சு நின்ற போதிலும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான உன் போராட்டம் நின்றதில்லை,
அதற்காக உனக்கு வாக்களிக்க விரும்புகிறேன்!

*இலங்கையில் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையை கண்டித்தும் சர்வதேச விசாரணை வழங்கவும் ஐ.நா மற்றும் மத்திய அரசை வழியுறுத்தி ஐ.நா அலுவலக முற்றுகை செய்து மாபெரும் போராட்டம் செய்தாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன் !

*தமிழர்களின் உணர்விற்கு எதிராக இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்த மத்திய அரசை கண்டித்தும் கொலைகார ராஜபக்ஷேவை இந்தியாவிற்கு அழைத்து வந்த பாரதீய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜை கண்டித்து இரயில் மறியல் போராட்டம் செய்தாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன்!

*கூடங்குளம் போராட்டக்காரர்களின் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டம் செய்தாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன்!

*பூரண மதுவிலக்கை தமிழகம் முழுவதும் அமல்படுத்தக்கோரி தலைமை செயலகத்தை முற்றுகை செய்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் செய்தும் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன்!

*மனித உயிருக்கு உலை வைக்கும் DCW ஆலைகளை இழுத்து மூடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் போராடினாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன் !

*விவசாய விளை நிலங்கள் வழியாக கேஸ் லைன் பதிக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராடுகிறாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன்!

*தொடரும் விவசாயிகளின் தற்கொலை, தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 45 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க கோரியும் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் செய்தாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன்!

*ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்திய மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பாலில் கலப்பட ஊழல் செய்ததை கண்டித்தும் ஆவின் நிறுவன முற்றுகை போராட்டம் செய்தாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன்!

*தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு காரணமான பாசிஸவாதிகள் பதவி விலக கோரியும், JNU மாணவர் கன்ஹையா குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் மாபெரும் பாராளுமன்ற முற்றுகை போராட்டம் செய்தாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன்!

*தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக வதந்தியை பரப்பி இஸ்லாமிய முதியவர் பாசிஸவாதிவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து முலாயம் சிங் யாதவ் வீட்டை முற்றுகை செய்து போராட்டம் செய்தாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன்!

*பாலஸ்தீனை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து அப்பாவி பொது மக்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்து வரும் இஸ்ரேலிய தீவிரவாதிகளை கண்டித்து இஸ்ரேலிய தூதரகம் முற்றுகை செய்து இஸ்ரேலிய கொடி எரிப்பு போராட்டம் செய்தாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன்!

*திருவாரூர்-காரைக்குடி இரயில் பாதையை அகல இரயில் பாதையாக மாற்ற மாபெரும் இரயில் மறியல் போராட்டம் செய்தாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன் !

*பர்மாவில் தொடரும் பெளத்த பேரினவாதிகளால் நடைபெறும் படுகொலைகள் மனித உரிமை மீறல்களை கண்டிக்காத ஐ.நா சபையை கண்டித்து ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம் செய்தாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன்!

*அப்பாவி சிறைவாசிகள் மற்றும் பல வருடங்களாக நீதி கிடைக்காமல் விசாரணை கைதிகளாகவே தன் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கும் அனைத்து சிறைவாசிகளின் விடுதலைக்காகவும் பல போராட்டங்களை செய்து வருகிறாயே,
அதற்காக வாக்களிக்க விரும்புகிறேன்!

இன்னும் எத்தனையோ கூறிக்கொண்டே போகலாம்!!!

இத்தனையும் செய்தாலும் எங்களுக்காக என்ன செய்தாய் என மக்கள் கேட்கும் பொழுது பட்ட கஷ்டங்களையும், இன்னல்களையும்,சிறைவாசத்தையும்,பொருட்சேதத்தையும்,உயிரிழப்பையும் மறந்து கவலை கொள்ளாமல் மக்களின் நலனுக்காக போராட களம் நோக்கி சென்று கொண்டிருக்கிறாயே!!!
அதற்காகவே உனக்கு வாக்களிக்க விரும்புகிறேன்!

 

மதுக்கூர் நகரம்....
பட்டுக்கோட்டை தொகுதி...
தஞ்சை தெற்கு....


gas 021
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.