திருவாரூரை திணற வைத்த TNTJ போராட்டம்....!!திருவாரூர் மாவட்டம் நாச்சிக்குளத்திலுள்ள தவ்ஹீத் பள்ளிவாசலை கடந்த 08.04.16 அன்று அயோக்கியர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய அயோக்கியர்கள் மீது முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.


புகாரின் பேரின் பள்ளிவாசலை தாக்கிய ரவுடிகளை கைது செய்யாமல் சம்பந்தமே இல்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினரை கைது செய்து ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது

முத்துப்பேட்டை காவல்துறை. சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்திய முத்துப்பேட்டை காவல்துறையை கண்டித்தும், பள்ளிவாசலை தாக்கிய ரவுடிகளை கண்டித்தும் திருவாரூரில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நேற்று அனுமதி மறுத்த காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று TNTJ பல்லாயிரக்கணக்கான மக்களை கைது செய்ய முடியாத என்பதை உணர்ந்த காவல்துறை ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியது. மேலும் ஆர்ப்பாட்டத்தின் வீரியத்தை உணர்ந்த காவல்துறை இன்று காலை பள்ளிவாசலை தாக்கிய மூன்று ரவுடிகளை கைது செய்துள்ளது.ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர்.

TNTJ யின் ஆர்ப்பாட்டத்தினால் திருவாரூர் திணறியது.

[gallery columns="1" size="large" ids="35090,35089,35088"]

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.