WhatsApp இல் பாதுகாப்பான வசதி அறிமுகம்!



மெஸ்ஸேஜ் ஆப்ஸில் முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள புதிய வசதியை அளித்துள்ளது.

உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான புதுமைகளை அவ்வப்போது புகுத்தி வந்தது.
வாட்ஸ் அப் குரூப் சாட்டில் 100 நபர்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற எண்ணிக்கையை 256ஆக உயர்த்தியது.
இதுபோல் பல மாற்றங்களை செய்து வந்தது. இந்நிலையில் தற்போது மறையாக்கம் (Encryption) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நாம் ஒருவருக்கு அனுப்பும் தகவல், புகைப்படம், வீடியோ என எதுவானாலும் மறையாக்கம் செய்யப்பட்டே பகிரப்படும்.

இதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு அனுப்பப்படும் தகவல்களை யாரும் இடை மறித்து ஹேக் செய்ய முடியாது.இதனால் அரசாங்கம், ஹேக்கர் என இதனை யாராலும் பயன்படுத்த முடியாது.

நமது தகவல் பரிமாற்றம் இருவர் அல்லது குரூப் நபர்களுக்கு மட்டும் நேரடியாக போய் சேர்வதாக கூறப்படுகிறது.

இது வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு மேலும் பாதுகாப்பாக அமைந்துள்ளது.எனினும் இந்த வசதியை பெற வாட்ஸ் அப்பை அப்டேட் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.