12 ஆண்டுகளுக்குப் பிறகு 'பிலால்' விடுதலை ! மும்பை செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு !!தீவிவிரவாத குற்றச்சாட்டு-ஆயுத தயாரிப்பு வழக்கு: 12 ஆண்டுகளுக்குப் பிறகு 'பிலால்' விடுதலை !

மும்பை செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு !!


தேச துரோகம்- தீவிவிரவாத குற்றச்சாட்டு-ஆயுத தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலிருந்தும் 12 ஆண்டுகளுக்குப்பிறகு 'பிலால் காகசி' விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்த விரிவான செய்தியாவது :

03-08-2003 அன்று, மும்பையின் 'அந்தேரி' காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 7 நபர்களில் ஒருவர், பிலாலுக்கு எதிரான வாக்குமூலம் அளித்ததையடுத்து, பிலால் மீது குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கர பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மறைந்த வழக்கறிஞர் 'ஷாஹித் ஆசமி' பிலாலுக்கு ஆதரவாக கீழ்க் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, அப்போது நிராகரிக்கப்பட்டது.

அதையடுத்து, 'ஜம்யியதுல் உலமா' சார்பில் வழக்கறிஞர் 'ஷரீப் ஷேக்' செஷன்ஸ் கோர்ட்டில் வாதாடி பிலாலுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்துள்ளார்.

போலீஸ் காவலில் விசாரிக்கப்படும் குற்றவாளிகளின் வாக்குமூலத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது, என்று வாதாடிய 'ஷரீப் ஷேக்' ஒருவரை போலீஸ் காவலில் எடுத்து 'நார்கோ டெஸ்ட்' மூலம் பெறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையிலும் ஒருவரை வழக்கில் சேர்க்க முடியாது என்றார், வழக்கறிஞ்சர் ஷேக்.

'எப் ஐ ஆர்' மற்றும் குற்றப்பத்திரிக்கையில் எங்குமே பிலாலின் பெயர் இல்லாத நிலையில் அவரை சிறைப்படுத்தி வைப்பது அநியாயம் என்றார், அட்வகேட் ஷேக்.

இதையடுத்து, பிலால் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்த செஷன்ஸ் நீதிமன்றம், பிலாலை வழக்கிலிருந்தே விடுவித்து தீர்ப்பளித்து விட்டது.

பிலால் ஒரு வழக்கறிஞர் என்பது கூடுதல் செய்தியாகும்.

சென்ற வாரம் 'ஹுப்ளி' குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 முஸ்லிம்களில் 3 பேர் 'டாக்டர்கள்' என்பதுடன் ஒருவர் 'எம்பிபிஎஸ்' (கைது செய்யப்படும் போது) இறுதியாண்டு மாணவர் என்பதும் குறிபிடத்தக்கது.

ஹுப்ளி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒட்டுமொத்த 17 முஸ்லிம்களும் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டாலும், அவர்களில் 12 நபர்கள் மீது மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர்கள் இன்னும் சிறையிலிருந்து வெளிவரமுடியாத நிலையில் உள்ளனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.