உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்து அவதிப்படும் 12 வயது வங்காளதேச சிறுமிவங்காளதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளது. இதனால் பொது இடங்களில் தலைக்காட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். வங்காள தேசத்தை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவர் மோட்டார் பைக் டாக்சி டிரைவராக உள்ளார். இவரது மகள் பிதி அக்தர் (வயது 12). இவர் ஓநாய் நோய் என்று அழைக்கப்படும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். பிறக்கும் போதே அவரது முகத்தை சுற்றி முடி வளர்ந்திருந்தது. பின்னர் உடல் முழுவதும் முடி வளர ஆரம்பித்துள்ளது. இந்த குறைபாடு, குழந்தை வளர வளர சரியாகி விடும் என்று பெற்றோர் நினைத்து அப்படியே விட்டுவிட்டனர். ஆனால் வளர வளர அவருடன் ரோமங்களும் உடல் முழுவதும் வளர தொடங்கியது. அத்துடன் அவரது ஊனும் வளர்ந்து வீங்கி காணப்பட்டது.

இதனால் அந்த சிறுமி தன்னுடைய உடலை மூடிக்கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். அவரது தந்தைக்கு வருமானம் அதிகம் இல்லாததால் தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளார். இதுகுறித்து சிறுமியின் அம்மா கூறுகையில் ‘‘அவள் பிறக்கும்போது கடவுள் கொடுத்த வரம் என்று நினைத்தோம். ஆனால், ஒவ்வொரு நாளும் வலியுடன் வாழும் எனது குழந்தையை நீண்ட காலம் என்னால் பார்க்க முடியாது’’ என்றார். சிறுமிக்கு  சிகிச்சை அளிக்கும் டாக்டர் கூறுகையில் ‘‘உலகத்தில் நான்கு அல்லது ஐந்து பேர்தான் இதுபோன்ற விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்’’ என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.