16 வயதிற்குள் 22 கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய சாதனை மாணவர் முஹம்மது நதீம்!சென்னை ஆவடி அருகிலுள்ள ஏ.எம்.எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ (எலக்டிரிக்கல்) படித்து வரும் முஹம்மது நதீம் 16 வயதில் 22 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

இரும்பு கம்பியில் ஒயரை இணைத்து தண்ணீரை சூடாக்கும் வாட்டர் ஹீட்டர் முதலில் உறுவாக்கி இருக்கிறார்.


ஹெல்மட்டில் சிறிய பேன், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டால் ரெயிலுக்கு சிக்னல் காட்டும் கருவி , ஷூ மூலம் இயங்கும் செல்போன் சார்ஜர் , பிரிட்ஜ் இன்வெட்டர், வீட்டு பூட்டை திறந்தால் செல்போன் மூலம் சிக்னல் கொடுக்கும் அலாரம், சோலார் பேனல் வழியே இயங்கும் செல்போன் சார்ஜர் என நீள்கிறது முஹம்மது நதீமின் கண்டுபிடிப்பு பட்டியல்.

மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த முஹம்மது நதீமின் தந்தை பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

அரசாங்கம் முஹம்மது நதீமை அரவணைத்தால் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமையை சேர்ப்பார்.

நன்றி: முகநூல் முஸ்லிம் மீடியா

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.