விமானம் தரையிறங்கிய போது நடந்த விபரீதம்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 163 பயணிகள்மும்பை விமான நிலையத்தில் ஜேர்மனியின் லுப்தான்சா விமானம் தரையிறங்கிய போது விமானத்தின் டயர் வெடித்த சம்பவத்தில் அதில் இருந்த 163 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

ஜேர்மன் தேசிய விமான நிறுவனமான லுப்தான்சா நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று 163 பயணிகளுடன் நேற்று முன் தினம் இரவு மும்பைக்கு வந்தது.

அப்போது விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் 4 டயர்கள் வெடித்தன. ஆனாலும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சரியான இடத்தில் நிறுத்தினார்.

இதில் விமானத்தில் இருந்த 163 பயணிகளும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விபத்து நடந்த ஓடுபாதையை பயன்படுத்த முடியாததால், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இந்த சம்பவத்தால் மும்பையில் இருந்து முனிச் நகருக்கு நேற்று புறப்பட்டுச் செல்லக்கூடிய லுப்தான்சா விமானமும் ரத்து செய்யப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.