மராட்டியத்தில் வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து - 17 பேர் உயிரிழப்புமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மத்திய வெடி பொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்,  2 அதிகாரிகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்கான் என்ற இடத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடி பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்குள்ள கிடங்கு ஒன்றில் நேற்றிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெடி பொருட்கள் மீதும் தீ பரவியதால் அவை வெடித்து சிதறின. இதனால் மற்ற கி்டங்குகளுக்கும் தீ எளிதில் பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தாலும் அவர்களால் பற்றி எரிந்த தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

அதிகாலை வரை தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் சுற்றுப் புற பகுதிகள் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விடிய விடிய பல மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் இன்று காலை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வெடி விபத்தில் 2 அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர்  பலியாகினர். பலத்த காயமடைந்த 10க்கும் மேற்பட்டோருக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீ அணைக்கப்பட்டாலும் பிற கிடங்குகளில் வெடிக்கும் ஆபத்து இருப்பதால் அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.