எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 199 கைதிகள் தேர்ச்சி..! ஆயுள் கைதி 421 மார்க் எடுத்து அசத்தல்!த்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 199 சிறைக் கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி ஹக்கீம் 421 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் 226 சிறைக்கைதிகள் தேர்வு எழுதினர். இதில் 199 சிறைக் கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ஹக்கீம் 412 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

புதுக்கோட்டை சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி பிரசாத் 416 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

திருச்சி சிறையில் உள்ள கைதி சரவணன் 412 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவர்களை சிறைத்துறை அதிகாரிகள் வாழ்த்தினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.