கலெக்டர் ஆவதே லட்சியம் +2 தேர்வில் நாகை மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்ற மாணவி - ஹஷானாஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று கலெக்டர் ஆவதே எனது லட்சியம் என்று பிளஸ்-2 தேர்வில் நாகை மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்ற மாணவி ஹஷானா கூறினார்.
பிளஸ்-2 தேர்வு முடிவு
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அல்காதிரியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி ஹஷானா 1,180 மதிப்பெண்கள் பெற்று நாகை மாவட்ட அளவில் 2-ம் இடத்தையும், பள்ளி அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இந்த மாணவிக்கு பள்ளியின் நிறுவனரும், தாளாளருமான டாக்டர்.ராஜாராமன் பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்ற மாணவி ஹஷானா நிருபர்களிடம் கூறியதாவது:-
லட்சியம்
நான் மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றதற்கு எனது பெற்றோர், பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளின் ஊக்குவிப்பே முக்கிய காரணமாகும். இதைதொடர்ந்து நான் பி.பி.ஏ. படித்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்ற பெற்று கலெக்டர் ஆவதே எனது லட்சியமாகும். என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பள்ளி முதல்வர் நேருஜி, துணை முதல்வர் உதயசங்கர், நிர்வாக அதிகாரி மாதவி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.