முத்துப்பேட்டையில் தகராறு செய்த நண்பர்கள் 2 பேர் கைது



கொடுக்கல்,வாங்கல் தகராறில் மோதிக்கொண்ட நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவா;கள் திருமுருகன்(28), ராஜ்குமார்(27). நண்பர்கள். இவர்கள் இருவரும் லண்டனில் ஒரே இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு திருமுருகன் ஊருக்கு திரும்பினார்.

ராஜ்குமார் கடந்த வாரம் ஊருக்கு வந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் அங்கு சென்று இருவரையும் கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.