நிஸாருத்தீன் அஹமத். பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர். 23 ஆண்டுகள் கழித்து விடுதலைபாபர் மஸ்ஜித் இடிப்பின் முதலாமாண்டு நினைவு நாளில் ரயிலில் குண்டு வைத்தாக பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர். 23 ஆண்டுகள் கழித்து கடந்த 11 ஆம் தேதி நிரபராதி என்று விடுவிக்கப்பட்டவர்.நிஸாருத்தீன் அஹமத்.

 

அவரின் மனம் உடைந்து வெழிப்பட்ட வார்த்தைகள்

நான் என்னுடைய இருபது வயதை எட்டாத நிலையில் என்னை சிறையில் வீசினார்கள். இப்பொழுது எனக்கு 43 வயதாகிறது. நான் என்னுடைய இளைய தங்கையை கடைசியாக பார்த்த பொழுது அவளுக்கு 12 வயது. ஆனால் இப்பொழுது அவளுடைய மகளின் வயதே 12 ஆகிறது.


என்னுடைய இன்னொரு மருமகளுக்கு அன்று ஒரு வயதாக இருந்தது. இப்பொழுது அவளுக்கு திருமணம் முடிந்து விட்டது.

என்னுடைய அண்ணி என்னைவிட இரண்டு வயது இளையவர். ஆனால் அவர் இப்பொழுது பேரக்குழந்தைகள் கிடைக்கப்பெற்று பாட்டியாக இருக்கிறார்.

என்னை சிறையில் அடைத்ததன் மூலம் ஒரு தலைமுறையையே நான் இழந்துள்ளேன்.

மொத்தம் 8,150 நாட்களை நான் சிறையில் கழித்துள்ளேன். என்னைப் பொருத்தவரை என் வாழ்க்கை முடிந்து விட்டது. நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு நடமாடும் பிணத்தையே.


 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.