24 மணி நேரத்தில் 34 பாம்புகள் பிடித்தவருக்கு சாதனை விருதுகேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் அபீஷ். இவர் தனது 13 வயதில் இருந்து பாம்பு பிடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன்  குடும்பத்தாருடன் வேலை தேடி குமுளி சென்றார். பிளஸ் 2 வரை படித்த இவர் கூலி வேலைக்கு செல்லும் பல இடங்களில் பாம்புகளை பிடித்து அதை  உயிருடன் வனப்பகுதிக்குள் கொண்டு விட்டு வந்தார். இவரது திறமையறிந்த பெரியாறு புலிகள் சரணாலய இணை இயக்குநராக இருந்த சஞ்சையன்குமார்,  கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அபிசுக்கு பெரியாறு புலிகள் சரணாலயத்தில் தற்காலிக பணி வழங்கினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குமுளி அருகே உள்ள அைணக்கரையில் கட்டிடம் கட்ட தோண்டிய இடத்தில் பாம்புகள் இருப்பதாக தகவல் கிடைத்தது.  இதையடுத்து அங்கு சென்ற அபீஷ், 12 நாகப்பாம்பு உட்பட 31 பாம்புகளை பிடித்து உயிருடன் பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் விட்டார். அதேநாளில்  பல்வேறு இடங்களிலிருந்து மேலும் 3 நாகப்பாம்புகளை பிடித்தார். ஒரேநாளில் 34 பாம்புகளை பிடித்து சாதித்த இவருக்கு உலக சாதனையாளர் விருது  வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விழா தேக்கடியில் உள்ள கேரள வனத்துறை பாம்குரோவ் அலுவலகத்தில்  நேற்று நடந்தது. யுனிவர்சல் ரெக்கார்டு பாரம் இந்தியன் ஜூரி ஹெட்  (உலகளாவிய பதிவுகள் மன்றம் இந்திய தலைமைக்குழு) அமைப்பை சேர்ந்த சுனில் ஜோசப்,   அபீஷூக்கு உலக சாதனையாளர் விருதை வழங்கினார். சாதனை குறித்து அபீஷ் கூறுகையில், ‘இதுவரை 5,200க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்திருக்கிறேன். ஒரு ராஜநாகத்தை பிடிக்கவேண்டும் என்பதே என்  லட்சியம். அதன்பிறகே திருமணம் செய்து கொள்வேன். எனக்கு மனைவியாக வருபவரும் பாம்புகளிடத்தில் அன்பு வைத்திருப்பவராக இருக்கவேண்டியது  அவசியம். என்னைவிட அதிகமான பாம்புகள் பிடித்தவர்கள் உள்ளனர். ஆனால் ஒரேநாளில் 34 பாம்புகளை பிடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது  மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.