இலங்கை 'மலையகத்தில் 25ஆம் தேதி வேலை நிறுத்தம்' ஊதிய உயர்வுப் பிரச்சனை:இலங்கையின் மலையகத் தொழிலாளர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாகாவிட்டால் இம்மாதம் 25ஆம் தேதி அங்கு அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.Lanka 01


                                                                                                                                     தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள்


நீண்ட நாட்களாக இழுபட்டுக் கொண்டிருக்கும் ஊதிய உயர்வை மையப்படுத்தியே மலையகப் பகுதியில் இம்முறை தொழிலாளர் தினக் கூட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றுள்ளன என அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இப்பிரச்சனை தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் தலைமைகள் மீதும் தொழிலாளர்கள் அதிருப்தி கொண்டிருந்தாலும், மேதினக் கூட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாளொன்றுக்கு கிடைக்கும் 620 ரூபாய் சம்பளம்1000 அளவுக்கு அதிகரிக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாகவே தொழிலாளர்களும், அரசியல் கட்சிகளும் கோரி வருகின்றன.

ஆனால் முதலாளிமார் சம்மேளம் அதற்கு இன்றுவரை உடன்படவில்லை.

எனவே இனியும் காத்திருக்க முடியாது எனக் கூறும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இம்மாதம் 24ஆம் தேதிக்கு முன்னர் ஊதிய உயர்வு குறித்த முடிவு தெரியாவிட்டால், 25ஆம் தேதி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபவர் எனவும் அவர் அறிவித்துள்ளார்.Lanka

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்கள்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் மலையகத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு பெற்றுத்தர தொடர்ந்து போராடும் என அக்கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

எனினும் தொழிற்சங்கங்கள் தம்மை ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என பல தேயிலைத் தோட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் கூறி வருந்துகின்றனர்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒராண்டும் நிலையிலும் மலையக மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.