ப்ரீடம் 251 சர்ச்சை முடிவதற்குள் ரூ.99-க்கு ஸ்மார்ட்போன் - நமோடெல் நிறுவனம் அறிமுகம்.நமோடெல் நிறுவனத்தின் நிறுவனர் மாதவ ரெட்டி ரூ.99 விலையிலான ஸ்மார்ட்போனை இன்று அறிமுகப்படுத்தினார். நமோடெல் அச்சே தின் என்ற இந்த ஸ்மார்ட்போன் 4 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம், மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் ஒரு ஜிபி ராம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,999 ரூபாயை அடக்க விலைக்கொண்ட இந்த போன், மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாதவ ரெட்டி தெரிவித்துள்ளார்.

பணம் கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் (சிஓடி) இந்த ஸ்மார்ட்போனுக்கு முன்பதிவு செய்யலாம். போனை டெலிவரி செய்வதற்கான கட்டணம் இதில் அடங்காது. வழக்கமான டெலிவரி தொகையை செலுத்த வேண்டும்.

இந்திய குடி மக்களுக்கும், ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும் என ரெட்டி தெரிவித்துள்ளார். இம்மாதம் 17-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை முன்பதிவு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

namotel.com இணையதளத்தில் ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அது ஸ்மார்ட்போனைப் பற்றி விளக்குவதற்காக மட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன் ப்ரீடம் 251 என்ற ஸ்மார்ட்போன் 251 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்தார்கள். ஆனால் இதுவரை முன்பதிவு செய்தவர்களுக்கு போன் வழங்கப்படவில்லை. மேலும் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.