திருத்துறைப்பூண்டி அருகே அ.தி.மு.க. தொண்டர்கள் சென்ற பஸ் வீட்டிற்குள் புகுந்தது - 2 பேர் காயம்தஞ்சையில் நேற்று அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. பொது செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார்.

இக்கூட்டத்தில் பங்கேற்க நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த தொண்டர்கள் ஒரு பஸ்சில் தஞ்சை வந்தனர். பொதுக்கூட்டம் முடிந்து அவர்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

பஸ்சை சிதம்பரம் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்த டிரைவர் மகேஸ்வரன் ஓட்டி வந்தார். இந்த பஸ் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பல்லாங்கோவில் மெயின் ரோட்டில் வந்த போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ரோடு ஓரம் இருந்த முகம்மது இப்ராகிம் மனைவி பாத்திமா பீவி வீட்டிற்குள் புகுந்தது.

இதில் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி விட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் மகேஸ்வரன், திருக்குவளை மடப்புரம் தென்பாதியை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் தங்கமணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

பலத்த காயம் அடைந்த மகேஸ்வரன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தங்கமணி திருத்துறைப்பூண்டியில் சிகிச்சை பெறுகிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.