ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் தேர்வு முடிவுகள் அறிவிப்பு! -சபி கான் 2-ம் இடம்புதுடெல்லி(11-05-16); ஐ.ஏ.எஸ், மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. இதில் டெல்லி மாணவி தீனா டாபி முதலிடம்,

காஷ்மீர் மாணவர் சபி கான் 2-ம் இடம், டெல்லி ஐஆர்எஸ் அதிகாரி ஜஸ்மீத் சிங் சாந்து 3-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

சென்னை தாம்பரத்தை சேர்ந்த இன்ஜினீயர் சரண்யா அரி (26) அகில இந்திய அளவில் 7-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 விதமான மத்திய அரசு உயர் பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இது முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என 3 நிலைகளை உள்ளடக்கியது. இத் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்துகிறது.

கடந்த 2015-ம் ஆண்டுக்கான 1,129 காலியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வின் மெயின் தேர்வு டிசம்பர் 18 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வை நாடு முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

தமிழகத்தில் சென்னையில் நடந்த தேர்வில் 855 பேர் கலந்துகொண்டனர். இதில் இருந்து சுமார் 2,600 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். நேர்முகத் தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி மே 6-ம் தேதி வரை டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடந்தது.

இந்நிலையில், சிவில் சர்வீசஸ் இறுதி தேர்வு முடிவுகள் நேற்று மாலை 4.45 மணி அளவில் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அகில இந்திய அளவில் 1,078 பேர் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் என பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.