மழை மற்றும் மின் தடங்கல்: வாக்குப்பதிவை 2 மணி நேரத்துக்கு நீட்டிக்க வேண்டும் -அ.தி.மு.க தி.மு.க கோரிக்கைதி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லாக்கானியிடம் ஒரு மனு கொடுத் துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

திருவாரூர், தஞ்சை, திருச்சி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், காஞ்சீபுரம், திருவள் ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் மழையின் காரணமாக மின் தடங்கல் ஏற்பட்டிருந்ததால் வாக்குப்பதிவு தடை பட்டது.

இந்த மின்தடை செயற்கையானதா? அல்லது இயற்கையாக நடந்ததா என தெரியவில்லை. எனவே வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரத்துக்கு நீட்டிக்க வேண்டும்.

மேலும் திருவண்ணா மலை மாவட்டத்தில் 240, 243 ஆகிய பூத்களில் அ.தி. மு.க.வினர் முற்றுகையிட்டு வாக்குச்சாவடியை கைப் பற்றி அவர்களே ஓட்டை பதிவு செய்துள்ளனர். இதை தட்டிக்கேட்க சென்ற தி.மு.க.வினரையும் தாக்கினார்கள். எனவே அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதே போல் தமிழக காங்கிரஸ் பொதுச்செயலா ளர் ஜோதியும் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில், “திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழையினால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளதால் 2 மணி நேரம் வாக்குப்பதிவை நீட்டிக்க வேண்டும்” என்று கேட்டுள்ளார். இந்த மனுக்களை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உரிய உத்தரவுகளை பிறப்பிப்பதாக ராஜேஷ் லக்கானி கூறியதாக அவர் தெரிவித்தார்.

இது போல் அ.தி.மு.க சார்பிலும் ஒரு மனு அளிக்கப்பட்டு உள்ளது அதில் பல்வேறு மாவட்டங்களில் மழையினால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளதால் 2 மணி நேரம் வாக்குப்பதிவை நீட்டிக்க வேண்டும் கூறப்பட்டு உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.