இலங்கையில் வரலாறு காணாத மழை: 2 கப்பல்களில் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியாஇலங்கையில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கி 63 பேர் பலியாகி இருக்கின்றனர். 134 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. வெள்ளம் ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 லட்சம் மக்கள் கொழும்புவில் இருந்து வெளியேறியுள்ளனர்.


கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருவதால், தலைநகர் கொழும்புவில் தாழ்வான பகுதியில்  வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறுமாறு, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.வெள்ள நீர் சூழ்ந்ததால், கடும் அவதிக்குள்ளான மக்கள் தலைநகர் கொழும்புவிலிருந்து கையில் கிடைத்த பொருட்களுடன் மரக்கலம், படகு என்று எது கிடைத்தாலும் வெளியேறி வருகின்றனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ராணுவம் உணவு பொருட்கள் வழங்கி வருகிறது.


இந்த வெள்ளத்திற்கு சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மக்கள் ஒருவருக்கொருவர் உதவிகரமாக ஆதரவுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.இலங்கையில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி அபாய கட்டத்தை எட்டியுள்ளது.  இதனால், அணை உடைப்பை தவிர்ப்பதற்காக முழு அளவில் தண்ணீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவும் வகையில், 2 கடற்படை கப்பல்களில் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.