இலங்கையில் தொடரும் பலத்த மழை – வெள்ள அபாய எச்சரிக்கை!!! 3 பேர் இறப்புஇலங்கையில் பெய்து வரும் பலத்த மழையைத் தொடர்ந்து, களனி மற்றும் மகா ஆறுகளில் வெள்ள நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கையை அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் திங்கள்கிழமை விடுத்துள்ளது.
வெள்ளம் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஸுன்ஹுவா செய்தியாளரிடம் தெரிவித்தார். எச்சரிக்கையைத் தொடர்ந்து, கரையோரம் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். கடந்த சனிக்கிழமை முதல் பெய்து வரும் மழையினால் பல்வேறு நகர்களின் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை, நிலச்சரிவு உள்ளிட்ட நிகழ்வுகளால் 3 பேர் உயிரிழந்தனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.