மழை வெள்ளம் காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர் ( படங்கள் இணைப்பு) 

இலங்கையில் தொடர் மழை, நிலச்சரிவுக்கு இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர்.  கன மழை காரணமாக மீட்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ரோனு புயல் காரணமாக இலங்கையில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழை பெய்து வருகிறது.  ஆரண்யகே, புலாத்கோகுபிட்டியா ஆகிய பகுதிகளில் பலத்த மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 64 பேர் உயிரிழந்துவிட்டனர். 134 பேர் காணாமல் போயுள்ளனர். 

354 வீடுகள் சேதமடைந்துள்ளன. 3 லட்சத்துத்துக்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

புயல், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருள்களுடன் 2 கப்பல்களையும், பேரிடர் மீட்புக் குழுவுடன் சி-17 ரக ஹெலிகாப்டரையும் இந்திய அரசு நேற்று அனுப்பியது. 

இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் சுனன்யா என்ற கடலோர ரோந்துக் கப்பலும், ஐஎன்எஸ் சட்லஜ் என்ற மேற்பார்வைக் கப்பலும் நிவாரணப் பொருள்களுடன் கொச்சியில் இருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

மேலும், தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள், சி-17 ரக ஹெலிகாப்டரில் இலங்கைக்குப் புறப்பட்டுள்ளனர். அந்த ஹெலிகாப்டரில் மருந்துப் பொருள்கள், உணவுப் பொருள்கள், நடமாடும் கழிப்பறைகள் ஆகியவை உள்ளன. Sri Flo 03
sri Flo 01

Sri Lankan residents wade through floodwaters in Welipanna on June 2, 2014. Mudslides cause by heavy monsoon rains in the west and south of the island have killed at least 13 people and left two more missing.   AFP PHOTO / Ishara S. KODIKARA

Sri Flo 05
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.