முத்துப்பேட்டையில் நின்றுகொண்டு இருந்த லாரிமீது கார் மோதி விபத்து! 4-பேர் படுகாயம்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் பின்னதூரிலிருந்து நெய்வேலிக்கு மாடுகள் ஏற்றி சென்ற லாரி ஒன்று நிறுத்தி அதன் டிரைவர் காளீஸ்வரன் சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது நாகை மாவட்டம், கீழ்வேளுரில் மளிகை கடை வைத்திருக்கும் நைனாமுகமது தனது குடும்பத்தினரை சொந்த காரில் ஏற்றிக்கொண்டு சொந்த ஊர் அம்மாபட்டினம் சென்றுக்கொண்டிருந்தபோது நின்றுகொண்டு இருந்த லாரியின் பின்பக்கம் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் கார் ஓட்டி வந்த மளிகை கடை வைத்திருக்கும் அம்மாபட்டினத்தை சேர்ந்த நைனாமுகமது, அவரது மாணவி மெகர்நிஷா மகன் சேக்தாவூது, மகள் சப்ரீன் பர்வீன் ஆகிய 4-பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர.

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.