உரிய அனுமதி பெற்றே 570 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்டது: ஐகோர்ட்டில் ரிசர்வ் வங்கி விளக்கம்திருப்பூரில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின்போது 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 570 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்த பணத்திற்கு உரிமை கோரிய பாரத ஸ்டேட் வங்கி, கோவையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தது.

இதுபற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், உண்மையான ஆவணங்களை வைத்து ஆய்வு செய்ததில், அந்த பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் 3 கண்டெய்னர் லாரிகளும் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டு, வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே, திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்றும், அதுவரை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி, சட்டபஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்த ரிசர்வ் வங்கி, அனுமதி பெற்றே பணம் எடுத்துச்செல்லப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

“கோவை எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு ரூ.570 கோடி பணம் எடுத்துச்செல்லப்பட்டது. இதற்கான அனுமதி ஏப்ரல் 18-ம் தேதியே பெறப்பட்டுவிட்டது. ஏற்கனவே இதுபோன்ற பெருந்தொகை பரிமாற்றம் நடைபெற்றுள்ள நிலையில், தேர்தல் நேரம் என்பதால் இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்படுகிறது” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.