மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா உள்ளிட்ட 5 பேர் விடுவிப்புமலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பெண் சாமியார் சாத்வி பிரக்யா உள்ளிட்ட 5 பேர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008 செப்டம்பரில் இருசக்கர மோட்டார் வாகனத்தில்  பொருத்தப்பட்ட 2 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். இதனை இந்து ஆதரவுக் குழுவான அபினவ் பாரத்  நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு ராணுவ அதிகாரி கர்னல் புரோஹித், சாத்வி பிரக்யா ஆகியோர்  கைது செய்யப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சாத்வி மற்றும் புரோஹித் 7 ஆண்டுகளாக  சிறையில் இருந்து வருகின்றனர்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித், மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் இந்து தீவிரவாதிகளாக  குற்றப்பத்திரிகையில் முதல் முறையாக இடம்பெற்றனர். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர்களை குற்றவாளிகளாகச் சேர்த்தனர். தலைமறைவான ராம்ஜி கசங்ரா, சந்தீப் டாங்கே, பிரவீன் முதாலிக் உட்பட 14 பேரை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு கடந்த 2011-ல் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. முதாலிக் 2012-ல் கைது செய்யப்பட்டார்.  லோகேஷ் சர்மா என்பவர் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் மீதான குற்றச்சாட்டுகளையும் என்.ஐ.ஏ. வாபஸ் பெற்றுள்ளது.   இந்த வழக்கு விசாரணையில் பல சாட்சிகள் பல்டி அடித்ததால் சாத்விக்கு எதிராக போதிய சாட்சியங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த குற்றப்பத்திரிகையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ.  நேற்று தாக்கல் செய்தது.

இதில் சாத்வீ பிரக்யா,  நாராயண் கசங்கரா, ஷியாம் பவர்லால் சாஹு, பிரவீண் தக்கல்கி ஆகியோர் மீது மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப் படவில்லை. இதையடுத்து  குற்றச்சாட்டுகளில் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களை மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்பு போலீசார் துன்புறுத்தி, கட்டாயத்திப்படுத்தி வாக்குமூலம் வாங்கியுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் மீது மகாராஷ்டிர மாநில ஒழுங்கு அமைக்கப்பட்ட குற்றச் சட்ட விதிகளை ( எம்சிஓசிஏ) பயன்படுத்தி மிரட்டியுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

தீவிரவாதிகளை காக்கும் முயற்சி
‘‘குண்டு வெடிப்பில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களை காப்பற்றவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது’’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு மறுத்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.