தேர்தல் அதிகாரி உள்பட 5 பேர் மரணம்: ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு தகவல்.தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற போது தேர்தல் அதிகாரி உள்பட 5 பேர் மரணம் அடைந்ததாக கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

 

தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-

ஒரு சில இடங்களில் நடைபெற்ற சிறுசிறு சம்பவங்கள் தவிர, அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. கட்சிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக 10 ஆயிரம் ரூபாயுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதுகுளத்தூரில் வாக்குப்பதிவு எந்திரம் உடைக்கப்பட்டுள்ளது. வேடசந்தூரில் சரக்கு வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றி வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலின்போது தேர்தல் அதிகாரி உள்பட 5 பேர் இயற்கை மரணம் அடைந்ததாக தகவல் வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.