தமிழகம்,69.19% புதுச்சேரி, 80.17% கேரளாவில் 70.35% வாக்குப்பதிவு நடந்து முடிந்தது...தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இன்று பலத்த பாதுகாப்புடன் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு சற்று தாமதமாகத் தொடங்கியது.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கு எந்திரங்களை தயார் செய்வற்கு முன்பே வாக்காளர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். வேட்பாளர்கள், கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ததால் வாக்குப்பதிவு மந்தமானது. பின்னர் மழை விட்டதும் வாக்குப்பதிவு தொடங்கியது.

மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 69.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பென்னாகரம் தொகுதியில் அதிகபட்சமாக 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். புதுச்சேரியில் 80.17 சதவீத வாக்குகளும், கேரளாவில் 70.35 சதவீத வாக்குகளும் பதிவாகின.

ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி அருகே கட்சியினருக்கிடையே சிறுசிறு தகராறுகள் ஏற்பட்டன. மற்றபடி 3 மாநிலங்களிலும் அமைதியான முறையில் நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.