துபாய் கண்காட்சியில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்க கார் அறிமுகம்ரூ.6 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட தங்க கார் துபாய் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் தயாரித்துள்ளது. தங்க தகடுகளால் ஆன இக்கார் 10 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடியே 50 லட்சமாகும்.
நிஸானின் ஏர் 35 ஜி.டி.ஆர். மாடல் ஆன இது ஒரு பந்தய கார் ஆகும்.இதற்கு ‘காட்ஷிலர்’ என பெயரிட்டுள்ளனர். 3.8 லிட்டர் என்ஜின் மற்றும் வி6 டுவின் டர்போ 545 எச்.பி. என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் அதிவேகத்தில் பறந்து செல்லக்கூடிய திறன் படைத்தது.

இதில் ஏரோ டைனமிக் வடிவமைப்போடு 6 ஸ்பீடு டியூயல் கிவிட்ச் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இதனால் பந்தயங்களின் போது அதற்கேற்ப வேகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும். துபாயில் தற்போது குல் ரேசிங் மற்றும் ஆட்டோ மெக்கானிக் துபாய் 2016 கண்காட்சி நடைபெறுகிறது. அதில் இக்கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கார் பார்வையாளர்கள் அனைவரையும் மிக வெகுவாக கவர்ந்தது.

 

Golden Car
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.