இலங்கை. கடும் மழை, நிலச்சரிவு : 71 பேர் உயிரிழப்புஇலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்களினால் 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், காணாமலும் போயிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இடர் முகாமைத்துவ அமைச்சகம் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி 71 பேர் உயிரிழந்தும், 127 பேர் காணாமலும் போயிருக்கிறார்கள்.

இதில் 46 மரணங்கள் நிலச்சரிவு அனர்த்தங்களின் பின்னர் இடம் பெற்றுள்ளது.

474 வீடுகள் முழுமையாகவும், 3674 வீடுகள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவில் அதிகாரிகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட சேத மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தலைநகர் கொழும்பு உட்பட வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் வெள்ளம் தற்போது வடிந்து வரும் நிலையில் தமது வாழ்விடங்களுக்கு குடும்பங்களில் ஒரு பகுதியினர் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்களினால் 3 இலட்சத்து 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையத்தின் துணை இயக்குநரான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள 2 இலட்சத்து 78 ஆயிரம் பேர் 491 நலன்புரி மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

srilanka_flood_mishap_624x351_afp srilanka_flood_mishap_624x352afp srilanka_flood_rescue_severe_weather_624x356_afp
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.