இந்திய நகரங்களில் 80 சதவீதம் பெண்கள் பொது இடங்களில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் ஆய்வில் தகவல்இங்கிலாந்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்தியாவில் 5 பெண்களில் 4 பேர் பொது இடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாகள் என்றும் அவமானங்களுக்கு உள்ளாகிறார்கள் என்றும் தெரியவந்து உள்ளது.

இந்த் ஆய்வில் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் 500 க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆய்வு நடத்தபட்டது. இதில் 84 சதவீதம் பெண்கள் தாங்கள் பொது இடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்து உள்ளனர். இவர்கள் 25 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களில் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்களும் மாணவிகளும் ஆவார்கள்.

இந்த நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனர், சந்தீப் சக்ரா கூறியதாவது:-

இந்தியாவில் 500 பெண்களிடம் கருத்து கேட்கபட்டது.இதில் பெரும்பாலான பெண்கள் மிகவும் தைரியாமாக பொது இடங்களில் தங்களுக்கு நேரும் அவமானங்களையும், துன்பறுத்தல்கள் குறித்தும் கருத்து தெரிவித்தனர்.இந்த சமூகத்தில் பெண்களுக்கு  பொது இடங்களில்  வாய்ப்பு இல்லை என கூறுகிறார்கள். என கூறினார்.


இது போல் இங்கிலாந்த சேர்ந்த யூகோவ் மேமாதம் 502 பெண்களிடம் ஆன் லன் மூலம் சர்வே நடத்தியது. இது புதுடெல்லி, மும்பை, பெங்களூர் சென்னை, கொல்கத்தா உள்பட  பல நகரங்களில் நடத்தப்பட்டது.

இதில் தாங்கள்  தெரு, பூங்காக்கள், சமூக நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள்,கல்லூரி வளாகங்கள் பொது போக்குவரத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது.என பல்வேறுபட்ட இடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக கூறி உள்ளனர்.

46 சதவீதம் பெண்கள்  பொது இடங்களில் தங்களின் பெயரை கூறி அழைத்து அவமானபடுத்துவதாக கூறினர். 44 சதவீதம் பெண்கள் கேலி செய்வதன் மூலம் அவமானபட்டதாக கூறினர்.16 சதவீதம் பேர் போதை பேர்வழிகளாலும்,9 சதவீதம் பேர் தாங்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும் கூறி உள்ளனர்.

 

Thanks To: Daily Thanthi
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.