மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்குபெற்ற அதிரையர்கள்!கிரசன்ட் பிளட் டோனர்ஸ் (CBD), ட்ராக்பார்ஸ் மற்றும் கருப்பு எழுத்துக் கழகம் ஆகியோர் இணைந்து கேரளாவை சேர்ந்த சகோதரி JISHA அவர்களை கற்பழித்து கொடுமையான முறையில் கொலை செய்த கயவர்களை உடனடியாக கைது செய்தும் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் மாபெரும் பேரணி நேற்று (08-05-2016) மாலை 5.00 மணியவில் நடைபெற்றது .


தன் தாயுடன் வசித்த எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவி, கடந்த வியாழன் அன்று தன்னுடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இரவு 8.30 மணிக்கு வீட்டுக்குத் திரும்பிய அவருடைய தாய், மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானர். தற்சமயம் மனம்பிழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


கொலையான மாணவியின் உடலில் 30 இடங்களில் கடுமையான காயம் பட்டுள்ளது.


இரு  மார்புகளும் அறுக்கப்பட்டுள்ளன கூர்மையான ஆயுதங்களால் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதோடு, அவருடைய அடிவயிறு பகுதியில் கடுமையாக சிதைக்கப்பட்டு, குடலை உருவி வெளியே போட்டிருக்கின்றன. கொலையாளிகள் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை.


கற்பழித்து ,கொலை செய்த கயவர்களை கைது செய்ய கோரியும் ,இது போன்ற கொடுமையான செயல்கள் இன்னி இந்தியாவில் நடைபெறா வண்ணம் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது .இந்த பேரணிக்கு கிரசன்ட் பிளட் டோனர்ஸ் மாநில தலைவர் குர்ஷீத் ஹுசைன் , ட்ராக்பார்ஸ் தலைவர் கிஷோர்,கருப்பு எழுத்து கழக மாநில ஒருங்கிணைப்பாளர் நாசர்தீன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் தோழர் எஸ்.ஏ.என்.வசீகரன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் ,மக்கள் பாதை உமர் முக்தார் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கண்டணத்தைப் பதிவு செய்தனர்.மேலும் ஸ்டாலின் அவர்கள் கண்டன கோஷம் எழுப்பினார் .


இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளவர்களை பொது வெளியில் தண்டிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அமைதி பேரணியில் 600-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் .


இதில் CBD தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் காலித் அஹ்மத்,அதிரை கலீபா,சமூக ஆர்வலர்கள், பல கட்சி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள், இரத்ததான அமைப்புகள் உட்பட பலர் கலந்து கொண்டு இந்த கொடூர  வன்முறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


blogger-image--411539229
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.