குட்கா, பான்மசாலாவுக்கு இன்று முதல் தடை! பீகாரில் மது விலக்கை தொடர்ந்து அடுத்த அதிரடி..



மதுபான விற்பனையை தடை செய்துள்ள பீகார் தற்போது, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கும் தடை விதித்து அசத்தியுள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான அரசு மீண்டும் பீகாரில் பதவிக்கு வந்ததும், மது விலக்கை மாநிலத்தில் அமல்படுத்தினார். மது விற்பனை, மது அருந்துதல், மதுவை சேமித்து வைத்தல் போன்ற அனைத்துவகை செயல்பாடுகளுக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டது.

 

இந்நிலையில், குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை தயாரிக்க, சாப்பிட, வைத்திருக்க என அனைத்துவகை நடவடிக்கைகளுக்கும் பீகார் அரசு தடை விதித்துள்ளது. இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பின்தங்கிய மாநிலமாக இருந்த பீகாரை சமூக ரீதியாக முன்நகர்த்தும், நிதிஷ்குமார் அரசின் மற்றொரு முயற்சியாக சமூக ஆர்வலர்கள் இதை பார்க்கிறார்கள். நிதீஷ்குமாரை போலவே மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள ஜெயலலிதாவும், தமிழகத்தில் இதுபோன்ற மக்களை பாதிக்கும் விஷயங்களுக்கு கட்டுப்பாட்டை கொண்டுவருவாரா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.